காந்தி குடும்பம் களங்கமற்றது என்றால்,ஏன் கவலை? – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிப்பது புலனாய்வு அமைப்புகளின் கடமை என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், காந்தி குடும்பம் கழகம் அற்றது என்றால் ஏன் கவலை? ஊழலில் ஈடுபடவில்லை என்றால் எதற்கு இந்த கூச்சல்? ஊழலில் ஈடுபட்டவர்களை விசாரிப்பது புலனாய்வு அமைப்புகளின் கடமை என கருத்து தெரிவித்துள்ளார்.