#Breaking : அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி.!
நேஷனல் ஹீரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறை முன்பு ஆஜராகி உள்ளார்.
நேஷனல் ஹீரால்டு பத்திரிகை நிறுவன சொத்துக்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் பணமோசடி நடந்துள்ளதாக, பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையை அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு விசாரணைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த சமயம் சோனியா காந்திக்கு கொரோனா வந்திருந்ததால், விசாரணையில் இருந்து விலக்கு அளித்திருந்தது. இதனை அடுத்து, மீண்டும் இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வர உத்தரவிடபட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து, சோனியா காந்தி இன்று அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். காங்கிரஸ் முக்கிய தலைவரை அமலாக்க துறை விசாரித்து வருவதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.