#Breaking : குடியரசு தலைவர் தேர்தல் நிலவரம்… வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.!
நடைபெற்று முடிந்த குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் தவறாமல் வாக்களித்தனர்.
இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் நாட்டின் 15வது குடியரசு தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.
இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா அவர்களும் போட்டியிடுகின்றனர்.