மீண்டும் இந்திய சந்தையில் கெத்தாக களமிறங்கும் RX100.! வெளியான உறுதியான தகவல்கள்…

Default Image

இளைஞர்களின் ஆல்டைம் பேவரைட் RX100 மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்கும் என யமஹா சேர்மன் கூறியுள்ளார். 

1985 ஆம் ஆண்டு யமஹா நிறுவனம் தனது RX100 ரக ஜாம்பவானை இந்திய சந்தையில் களமிறக்கியது. அதன் வேகத்துக்கு தற்போதுள்ள சூப்பர் பைக்குகளே திணறும். அப்படி இருக்கையில் அந்த காலத்தில் சொல்லவா வேண்டும்.

இதனை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம். இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தாலும், தனது RX100 பைக் உற்பத்தியை 1996ஆம் ஆண்டே நிறுத்தி கொண்டது யமஹா.

இருந்தும் தற்போது வரையில் இதன் உதிரி பாகங்கள் தயாராகி விநியோகிக்கபாடுவதில் இருந்தே தெரிந்திருக்கும் இதன் மீதான குறையாத ஏகோபித்த வரவேற்பு.

இந்நிலையில், இந்த RX100 ரக பைக் மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்கும் என யமஹா நிறுவன சேர்மன் தெரிவித்துள்ளார். ஆனால், 1990 காலகட்டங்களில் தயாரித்தது போல 2 ஸ்ட்ரோக் எஞ்சின் தயாரிக்க முடியாது.

அதற்கு, தற்போதுள்ள BS6 கட்டுப்பாடுகள் அனுமதிக்காது என்பதால்,  அதன் எஞ்சின் தரத்தை கொஞ்சம் இந்திய கட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி களமிறக்கப்படும்.

2025வரை யமஹா தயாரிப்பு களமிறங்க பட்டியல் வந்துள்ளாதால், 2026ஆம் ஆண்டுதான் அனைவரும் எதிர்பார்க்கும் RX100 உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்