கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்வு..! மநீம வரவேற்பு..!

Default Image

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தியதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு. 

கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது; அத்தீர்மானங்களை விரைவாக,முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்