BREAKING NEWS:ஆதாயத்துக்காக மஜதவை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது!அமித் ஷா கடும் சாடல்
காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல்காந்தி மறந்துவிடக்கூடாது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து பாஜக தலைவர் அமித் ஷா கூறுகையில், தேர்தலுக்கு பின் அரசியல் ஆதாயத்துக்காக மஜதவை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. கர்நாடக மக்கள் யாரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது தேர்தல் முடியில் தெளிவாக தெரிகிறது என்றும் பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார் .
கர்நாடக சட்டசபை தேர்தல்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு: