அழகர் கோவில் வசந்த உற்சவ விழா..!! வரும் 20 தேதி துவங்குகிறது..!!
திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்த பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்திற்கான விழா வருகிற 20-ந்தேதி மாலை தொடங்குகிறது.
இதில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல அங்குள்ள வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார்.
மேலும் அழகர்மலையின் கோடை காலத்தில் அதிக வெப்பத்தை தணிப்பதற்காக இறைவன் குளிர்ந்த மழையை பெய்ய வைப்பதாக ஐதீகம் இந்த தருணத்தில் மலையை சுற்றி மூலிகை கலந்த வசந்த காற்றுகள் இந்த காலநிலையில் அதிக அளவு வீசும் என்பதால், கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்கிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்