நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமலஹாசன்

Default Image

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் என கமலஹாசன் கடிதம். 

தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களின் மரணம் தொடர்ந்து வருவதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், பொது தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியர் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என தற்கொலைக்கான  காரணிகள் வேறுபட்டாலும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கள் அபிப்பிராயங்கள் விருப்பங்களுக்கு செவி கொடுங்கள்.  ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அவமானப்படுத்திக் கொள்ளாது ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதன்படி தற்கொலை செய்திகளை ஒளி பரப்பும் போது தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ள இலவச மனநல ஆலோசனை வழங்கும் தற்கொலை தடுப்பு மையத்தின் எண்களோடு சேர்த்து அளிப்பதை ஒரு சமூக கடமையாக கைக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதை போல பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும்,  நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும்  என்ற அறிவுறுத்தலோடு தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்