BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா!
எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டுள்ளனர்.
எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசியலமைப்புக்கு எதிராக பாஜக செயல்படுவதை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மறுபுறம் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில் பேரவைக்கு வந்தார் எடியூரப்பா பேரவையில் வாயிற்படியை தொட்டு வணங்கி உள்ளே சென்றார் எடியூரப்பா.
இதேபோல் கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.
கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.