#BREAKING: மின்சார கட்டண உயர்வு – வரும் 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Default Image

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்.

வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. இந்த விடியா திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள், மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை விடியா திமுக அரசு தாக்கல் செய்யும்போது வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

எனவே, வரும் 25-ஆம் தேதி பொது நலனை முன்வைத்து கழக அமைப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் அதிமுகவினர், பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
elon musk trump
Donald Trump - War
donald trump benjamin netanyahu
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)