இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று இல்லை .?! முழு விவரம் இதோ…

Default Image

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து , அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை தகவல்கள் பரவியது.

ஆனால், மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனாலும், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளாராம்.

இது தொடர்பாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மணிரத்னத்தின் மனைவி சுகாசினி “மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அதன்காரணமாக தான் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்னுடய தந்தைக்கு வயது92 , தாய்க்கு 88 வயது. எனவே இந்த சமயத்தில் தனிமைப்படுத்துவது அவசியம் என்பதால் மருத்துவமனையில் இருக்கிறோம். மணிரத்னம் நலமாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்