#BREAKING : நுபுர் சர்மாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி, நுபுர் சர்மா தன மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி நாடு முழுவதும் உள்ள வழக்குகளை அனைத்தையும் அவர் நேரில் சென்று எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, நபிகள் நாயகம் குறித்த தனது கருத்துக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரியும், கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்றம் அவரது மனுவை ஏற்று டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இடைக்கால நடவடிக்கையாக, அவரை கைது செய்ய இடைக்கால கால தடை விதித்துள்ளது. மேலும், புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகளிலும் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.