ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி ! ஒரு டாலருக்கு ரூபாய் மதிப்பு 80ஐ எட்டியது !

Default Image

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 80ஐ தாண்டியது. அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை ரூபாயின் மதிப்பை சில காலமாக அழுத்தத்தில் வைத்திருக்கின்றன.

டிசம்பர் 31, 2014 முதல் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2022-23 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 14 பில்லியன் டாலர்களை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். இதுவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்று சீதாராமன் கூறினார்.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சரக்கு வர்த்தக வர்த்தகப் பற்றாக்குறை மே மாதத்தில் 24.3 பில்லியன் டாலராக இருந்து ஜூன் மாதத்தில் 26.18 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ரூபாயின் வீழ்ச்சியின் மிகப்பெரிய தாக்கம் பணவீக்கத்தில் தான்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புபவர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை உயரும். வெளிநாட்டுக் கல்வி மற்றும் சர்வதேசப் பயணங்களின் செலவு அதிகமாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நுகர்வோர் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

இந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிராக கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பு 7 சதவீதம் குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்