விமானத்தில் பறந்து பயணம் செய்யும் மிஸ்டர் வாக்குப்பெட்டி… தேர்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாடு.!
மிஸ்டர் வாக்குப்பெட்டி என்கிற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து வாக்குப்பெட்டிகள் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கு விமானங்கள் மூலம் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டன.
நேற்று நாடுமுழுவதும் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பாராளுமன்ற ராஜ்ய சபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள், பிரதமர் உட்பட அனைவரும் வாக்களித்தனர்.
இதில், அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பெட்டிகள் அவர்கள் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விமானம் மூலம் வாக்குப்பெட்டி அதிகாரிகள் துணையுடன் அனுப்பிவைக்கட்டது.
இதற்காக, தேர்தல் ஆணையம், மிஸ்டர் வாக்குப்பெட்டி என்ற பெயரில், இருவழி பயண விமான டிக்கெட்களை வாக்குப்பெட்டிகளுக்காக புக் செய்தது.
இதில் பயணம் செய்த வாக்குப்பெட்டிகள் தற்போது அதே விமான டிக்கெட்டில் திரும்பி வந்துள்ளன. இந்த மிஸ்டர் வாக்குப்பெட்டி டிக்கெட்களும், பயணம் செய்த போட்டோக்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.