காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் புதிய ஆட்சி தீர்ப்பின் படி செயல்படும்!மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் கட்சி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெறும் மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைத்தால் தமிழகத்திற்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீர் கிடைத்துவிடும் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.