வந்துவிட்டது புதிய கூகிள் நியூஸ் அப்..!
கூகிள் நிறுவனம் புதிய நியூஸ் செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இது பயனரின் தனிப்பட்ட விருப்பங்களை அவர்களின் பயன்பாடுகளை வைத்து புரிந்து கொண்டு பிரத்யேக தகவல்களை பிரித்து வழங்கும்.
இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கூகுள் ப்ளே நியூஸ் ஸ்டான்ட்(Google Play Newsstand) செயலியை மாற்றுகிறது. உலகம் முழுக்க சுமார் 127 நாடுகளில் இந்த செயலி மெல்ல வழங்கப்படுகிறது. இந்த செயலியை பெறாதவர்கள் தொடர்ந்து முயற்சிக்கலாம்.
முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் புதிய கூகுள் செயலியில் அறிந்து கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு டேப்களில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபார் யூ (For You):
புதிய செயலியின் இனிஷியல் வியூ ப்ரீஃபிங் என அழைக்கப்படுகிறது. பிரீஃபிங் அம்சத்தில் உங்களது விருப்பங்கள் மற்றும் இருப்பிடத்தை வைத்து கூகுள் உங்களுக்கென தேர்வு செய்த ஐந்து செய்திகளை காண்பிக்கும். முக்கிய செய்திகளை தொடர்ந்து, நீங்கள் மேலும் விரும்பும் செய்திகளை புரிந்து கொண்டு கூகுள் அவற்றை காண்பிக்கும். நீங்கள் எந்தளவு புதிய கூகுள் நியூஸ் செயலியை பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ப சிறப்பான முறையில் செய்திகளை கூகுள் உங்களுக்கு வழங்கும். ஒருவேலை நீங்கள் விரும்பாத செய்திகளை பார்த்தால், செயலியின் மேல்புறத்தில் வலதுபுற மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து தெரிவிக்கலாம். இதே ஆப்ஷனை பயன்படுத்தி குறிப்பிட்ட தலைப்பில் உங்களுக்கு மேலும் தகவல்கள் வேண்டுமெனில் அவற்றை தெரிவிக்க முடியும்.
ஃபுல் கவரேஜ் (Full Coverage)
கூகுள் நியூஸ் செயலியில் நீங்கள் படிக்கும் செய்திகளில் குறிப்பிட்ட செயலி குறித்து அதிகம் அறிந்து கொள்ள விரும்பினால் செயலியில் காணப்படும் ஃபுல் கவரேஜ் பட்டனை க்ளிக் செய்யலாம். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் பிரத்யேக பக்கம் டாப் கவரேஜ், வீடியோக்கள், ட்விட்டர் மற்றும் அனைத்து கவரேஜ் உள்ளிட்ட பிரிவுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் இணையத்தில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் செய்திகள் உங்களுக்கு வழங்கப்படும். இதில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப படிக்கவோ அல்லது செய்திகளை கேட்கவோ முடியும். ஃபுல் கவரேஜ் பட்டன் ப்ரீஃபிங் ஃபீட் ஆப்ஷனில் காணப்படும். இந்த அம்சம் ஒவ்வொரு பயனருக்கும் வழங்கப்படுவதோடு, அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட இருக்கிறது.
ஹெட்லைன்ஸ் (Headlines):
இந்த அம்சம் பயன்படுத்தி உலக நடப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ப்ரீஃபிங் போன்று இல்லாமல் ஹெட்லைன்ஸ் அம்சத்தில் உங்களது விருப்பங்கள் தவிர்த்து அனைத்து செய்திகளும் பட்டியலிடப்பட்டு இருக்கும். இங்கு செய்திகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். இவற்றை ஸ்கிரால் செய்து வாசிக்க முடியும். சில தம்ப்நெயில்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செய்திகளை கொண்டிருக்கும், இங்கு வலது புறம் அல்லது இடது புறங்களில் ஸ்வைப் செய்து மற்ற செய்திகளையும் வாசிக்க முடியும். குறிப்பிட்ட தம்ப்நெயில்களை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட செய்திகளை வாசிக்க முடியும். ஃபேவரைட்ஸ் (Favorites) கூகுள் நியூஸ் செயலியின் ஃபேவரைட்ஸ் டேப் சென்று உங்களது விருப்பங்களை கூகுளிடம் தெரிவிக்கலாம்.
நியூஸ் ஸ்டான்டு (Newsstand):
நியூஸ் ஸ்டான்டு பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பதிப்பகங்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டு இருக்கும். இந்த ஆப்ஷனில் நீங்கள் விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தாதாரர் (Subscriber) ஆகமுடியும்.