IBPS கிளார்க் 2022: முதல்நிலைத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது..

Default Image

IBPS, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், 2022 ஆம் ஆண்டுக்கான மல்டிபர்ப்பஸ் அலுவலக உதவியாளர் (CRP RRBs XI) பதவிக்கான முதற்கட்டத் தேர்வுக்கான அனுமதி அட்டையை 16 ஜூலை 2022 சனிக்கிழமை அன்று வெளியிட்டது.

IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in லிருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

ஐபிபிஸ்  கிளார்க் முதல்நிலைத் தேர்வு வரும் 14 ஆகஸ்ட் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த முதல்நிலைத் தேர்வு, பகுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன் வகையை உள்ளடக்கியதாக இருக்கும்.

விண்ணப்பதாரர்கள் 80 கேள்விகளுக்கு 45 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இந்த 80 கேள்விகளில், 40 கேள்விகள் பகுத்தறிவு மற்றும் எண் திறனின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இருக்கும்.

ஐபிபிஸ் முதல்நிலைத் தேர்வில் தகுதிபெற, ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இரண்டாம்நிலைத் தேர்வில் தோன்றத் தகுதி பெறுவார்கள். ஐபிபிஸ் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாகவே நடக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்