மாணவர்கள் கவனத்திற்கு! பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

Default Image

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.

பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல்  படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளையுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1,76,155 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 20-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்