27 வயது அமெரிக்க பெண் டெல்லியில் கடத்தல்.? பெற்றோரிடம் பணம் பறிக்க நடந்த சதி அம்பலம்…
டெல்லியில் தங்கியுள்ள 27 வயது அமெரிக்க பெண் தான் கடத்தப்பட்டதாக தனது பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
டெல்லியில் 27 வயது அமெரிக்க பெண் ஒருவர் தனது ஆண் காதலருடன் தங்கி வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர் இங்கு தங்கி இருக்கையில் செலவு செய்ய பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது.
உடனே யோசித்த அந்த பெண், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள், என்னை ஓர் இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். என்னை துன்புறுத்துகிறார்கள் என தனது பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டார்.
உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரிக்கையில், 27 வயது பெண் நொய்டாவை சேர்ந்த தனது ஆண் நண்பருடன் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்க செய்த சதி திட்டம், போலி கடத்தல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.