Heatwaves :ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்தும் வெப்ப அலைகள்

Default Image

ஜூன் மற்றும் ஜூலை 2022 இல், வெப்ப அலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை தாக்கியது. இதனால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு (104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்து.

ஸ்பெயினில், 45.7 டிகிரி செல்சியஸ் (114 ஃபாரன்ஹீட்) வரை எட்டிய வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எட்டியது. இதில் மாட்ரிட்டின் மேற்கே லாஸ் ஹர்டெஸ் நகரமும் அடங்கும். 1,500 ஹெக்டேருக்கு மேல் (3,700 ஏக்கர்) தீயால் எரிந்துள்ளது.

Forest Fire

இத்தாலியில், டோலோமைட்களில் உள்ள மர்மோலாடா பனிப்பாறையின் ஒரு பகுதி ஜூலை 3 ம் தேதி சரிந்ததற்கு இதுவே காரணம். இங்கிலாந்து நாட்டின், வானிலை ஆய்வு மையம் தீவிர வெப்பம் மற்றும் அம்பர் எச்சரிக்கைகளை வெளியிட்டது, இதனால் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட ஆபிரிக்காவில், துனிசியாவில் ஒரு வெப்ப அலை மற்றும் தீயால் நாட்டின் தானிய பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. ஜூலை 13 அன்று தலைநகர் துனிஸில், வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டியது, இது 40 ஆண்டுகளில் உட்சபச்சமாகும்.

ஈரானில், ஜூன் மாத இறுதியில் 52 டிகிரி செல்சியஸை (126 டிகிரி பாரன்ஹீட்) அடைந்த பிறகு ஜூலையில் வெப்பநிலை அதிகமாக இருந்தது.

earth heat

சீனாவில், இந்த கோடைக்காலம் மூன்று வெப்ப அலைகளை சந்தித்துள்ளது. 1873 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் வைக்கப்பட்டுள்ள ஷாங்காய் சுஜியாஹுய் ஆய்வகம், இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்தது.

ஜூலை 13, 2022 அன்று 40.9 டிகிரி செல்சியஸ் (105 டிகிரி பாரன்ஹீட்). அதிக ஈரப்பதம், வெப்பமான இரவு வெப்பநிலையுடன், ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கியது.

சனிக்கிழமையன்று தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத் தீ பரவியது, இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சனிக்கிழமை காலை வரை பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் இருந்து 12,200 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 1,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.

Forest Fire

மேலும் சனிக்கிழமையன்று ஜிரோண்டே பகுதியில் கிட்டத்தட்ட 10,000 ஹெக்டேர் (25,000 ஏக்கர்) நிலம் தீப்பிடித்தது, இது வெள்ளிக்கிழமை 7,300 ஹெக்டேராக இருந்தது. வரவிருக்கும் நாட்களில் மேற்கு ஐரோப்பாவில் வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வறட்சி நிலைமைகளை மோசமாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்