தி லெஜெண்ட் படத்தின் டிரைலரை வெளியிட்ட தமன்னா.! அண்ணாச்சியின் மாஸ பாத்தீங்களா…
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் இந்த படத்தை இயக்கியுள்ளார்கள். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த அருள் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
அதிரடி ஆக்சன் கலந்த இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் தெலுங்கு ட்ரைலரை பிரபல நடிகையான தமன்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தமன்னாவே டிரைலரை வெளியிட வைத்துவிட்டார். அண்ணாச்சியின் மாஸ மாஸ பாத்தீங்களா என கூறி வருகிறார்கள்.
#LegendSaravanan‘s heroic debut #TheLegend Telugu trailer is here. Extremely excited to unveil it. Best wishes to the team of this Pan India magnum opus.
▶️ https://t.co/uA7eDgqK2M@jdjeryofficial @Jharrisjayaraj
#TheLegendSaravanastoresProduction #WorldwideReleaseJuly28 pic.twitter.com/JTetdt05SJ— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 16, 2022