தோல்வியை கண்டு மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் துவண்டு போகக்கூடாது !அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,தேர்வில் தோல்வி ஏற்பட்டால், மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் துவண்டுபோய்விடக் கூடாது என கேட்டுக்கொண்டிருக்கிறார்..
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வியை எதிர்கொண்ட மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் ஆறுதல்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
வாழ்க்கையில் சாதிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கும்போது, மதிப்பெண்கள் குறித்து, மாணவர்கள் கவலை கொள்ள கூடாது என்றும், மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றும் கல்வியாளர் நெடுஞ்செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.