கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்- டி.ஆர்.பாலு எம்.பி.

Default Image

பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக தி.மு.க.வைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என டி.ஆர்.பாலு பேச்சு. 

இடைக்கால அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசுகையில், இந்த கூட்டத்தை பார்க்கும் போது அதிமுக வெற்றி பெறுவதற்கு அச்சாரம் போடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என பேசி இருந்தார்.

இதற்கு டி.ஆர்.பாலு எம்பி அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதே சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க .மண்ணைக் கவ்வியிருப்பதையும் மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் தி.மு.க. கோட்டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். எப்படி மறக்க முடியும்? எடப்பாடி நகராட்சி உள்பட பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பழனிசாமியால் தூக்கத்திலும் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் தி.மு.க. கோட்டைதான். அன்பு எனும் கோட்டை கட்டி மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் முதலமைச்சர்.

தி.மு.கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், சர்வதேச தரத்திலான சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி வைத்தாரே அப்போது இந்தப் பழனிசாமி எங்கே போயிருந்தார்? எந்த டேபிளுக்கு கீழே ஊர்ந்து – தவழ்ந்து எவருடைய கால்களைத் தேடிக் கொண்டிருந்தார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். டி.ஜி.பி. அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய ஒன்றிய பா.ஜ.க அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத – முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக தி.மு.க.வைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்