வைரலான தொழுகை வீடியோ… இனி எந்த மத வழிப்பாட்டுக்கும் அனுமதி இல்லை.. பிரபல ஷாப்பிங் மால் அதிரடி.!

Default Image

லக்னோ ஷாப்பிங் மாலில் சில இஸ்லாமியர்கள் ஒன்றாக தொழுகை செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இனி அங்கு எந்த மத வழிபாட்டுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் பல்வேறு கிளைகள் கொண்டுள்ள ஷாப்பிங் மால் நிறுவனம் லுலு ஷாப்பிங் மால் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, உத்திர பிரதேசம் லக்னோ ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன.

இதில் லக்னோவில் உள்ள லுலு ஷாப்பிங் மாலில் தற்போது ஓர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில்,  இங்கு எந்த வித மத வழிபாடும் நடத்தகூடது. அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று.

அதற்க்கு பின்னால் என்ன நடந்தது என பார்த்தல், அதில், ஒரு வைரல் வீடியோ இருக்கிறது. அதாவது, ஷாப்பிங் மாலில் சில இஸ்லாமியர்கள் ஒன்றாக தொழுகை செய்தனர். இதனை சிலர் வீடியோ எடுத்து, பதிவிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து தான் லுலு மால் நிறுவனம், தங்களது ஷாப்பிங் மாலில் யாருக்கும் மத வழிபாடு நடத்த அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்துவிட்டனர். அதே போல அந்த மாலில் சுந்தரகாண்டம் வாசித்ததும் சர்ச்சையானது.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்