கமல்ஹாசன் கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ண மீட்டு தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்!
கமல்ஹாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
கருங்கல் சந்திப்பு என்ற இடத்துக்கு காரில் சென்ற அவர், வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்ட கமல் அந்த பெண்ணை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் அவர் மக்களைச் சந்தித்தார். குளச்சல் வந்த கமலிடம், ஒக்கி புயலில் பல மீனவர்கள் காணாமல் போன நிலையில், மீட்புப் படகு வாங்க நிதி திரப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். அந்த நிதிக்கு தனது சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
பிளஸ்டூ தேர்வில் 91 புள்ளி 1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், வினாத்தாள் தவறாக இருந்தாலும் சரியாக விடையளிக்க தமிழக மாணவர்கள் தயாராகியிருப்பதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.