முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்த சோனியா காந்தி..!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவரது உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் நேற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், முதல்வர் கொரானாவிலிருந்து விரைந்து குணமடைந்து வருவதாகவும், முதல்வர் அவர்கள் மேலும் சில நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவரது உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தார்.