1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகிக்கப்பட்ட நபர் கனடாவில் சுட்டுக் கொலை

Default Image

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம்  குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிபுதமன் சிங் மாலிக், சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு காலத்தில் ஆதரவாளராக இருந்தவர்,1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் 329 கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் தொடர்புடையதாக  கனடாவைச் சேர்ந்த சீக்கிய தொழிலதிபர் ரிபுதமன் சிங் மாலிக் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

அட்லாண்டிக் பெருங்கடலில் வெடித்த ஏர் இந்தியா விமானம் 182 மீதான தாக்குதல், வணிக விமானத்தின் மீது வரலாற்றின் மிக மோசமான குண்டுவெடிப்புகளில் ஒன்றாகும்.

எனினும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 2005ல் ரிபுதமன் சிங் மாலிக் இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜூலை 14 இல்,பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் உள்ள அவரது ஆடை வணிகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவம் பற்றிய முழுமையான விவரத்தை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest