அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி – ரூ.38 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை நடத்துவதற்கான தொகையினை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை கொண்டாடும் வகையில் 2004-2005 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று மாவட்ட அளவில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ரூ.3,125 வீதம் 32 மாவட்டங்களில் ரூ.1,00.000 மதிப்பிட்டில் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் போது சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையினை உயர்த்துவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை நடத்துவதற்கான தொகையினை ஒரு லட்சத்திலிருந்து, ரூ.38 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.