நடிகர் பிரதாப் போத்தன் மறைவு – நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.!

Default Image

இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 70. 1980-களில் நடிக்க  தொடங்கிய இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் என அணைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழா,  போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ” தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை ‘வெற்றிவிழா’ காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்