#BREAKING : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா – சபாநாயகர் மகிந்த யாப்பா
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக சபாநாயகர் மகிந்த யாப்பா அறிவிப்பு.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல் அதிபராக செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்த நிலையில், அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.