உங்க வீட்டில் இந்த இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பாருங்கள்..!மங்களம் பெருகும்..!
உங்கள் வீட்டில் இந்த பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பது மங்களகரத்தை அதிகரிக்கும்.
வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் தீரும் வாய்ப்புகள் உள்ளது. அதனை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் முக்கியமான மங்களம் அளிக்கும் பொருளாக கருதுகின்றனர். பொதுவாகவே வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஐதீகம் உள்ளது.
ஒருவேளை வேற இடத்தில் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்பட்டு வீட்டில் அல்லது குடும்பத்தில் பல்வேறு சண்டை, சச்சரவுகள் அதிகரித்து கொண்டே இருக்கும். இவை தீர சரியான இடத்தில் அந்த அந்த பொருட்களை வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் வைக்கும் கண்ணாடிகளை பலரும் அழகாக பல்வேறு இடங்களில் வைப்பதுண்டு. ஆனால், கண்ணாடி என்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு நன்மைகளும் நிறைந்து உள்ளது.
அதனால் அதனை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க சரியான இடம் வீட்டின் தென்மேற்கு மூலையாகும். தென்மேற்கு திசையில் உங்கள் வீட்டில் குளியலறை அல்லது கழிப்பறை இருந்தால் அங்கு கிழக்கு திசையில் உள்ள சுவரில் கண்ணாடியை பொருத்த வேண்டும். அதுவும் சதுர வடிவில் அந்த கண்ணடி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் தீரும்.
உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடம் பார்ப்பதற்கு ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தாலோ அல்லது கருமை நிறத்தில் இருந்தாலோ அங்கு உள்ள தோஷம் நீங்க அந்த பகுதியில் பெரியளவில் கண்ணாடியை வைக்கலாம். இது உங்கள் வீட்டில் நன்மை அளிக்கும். அதனை போல வீட்டு வாசலுக்கு எதிரே உயர்ந்த மின்கம்பம், கட்டிடம் அல்லது தேவையற்ற மரங்கள், பார்ப்பதற்கு விசித்திரமான ஏதாவது கூர்மை நிறைந்த முனைப்புகள் போன்றவை இருந்தால் வீட்டில் உள்ள கதவில் பாக்கு கண்ணாடியை மாட்டி வைக்கலாம்.