அதிமுக அலுவலகத்துக்கு சீல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது..!

Default Image

கட்சி அலுவலகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு மனுவில் ஓபிஎஸ் கோரியுள்ளார். அதிமுக அலுவலகம் தனி நபர் சொத்து அல்ல என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதற்கு இடையில், அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய நிலையில், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்க்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மொத்த இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என தெரிவித்து இருந்தார்.

இபிஎஸ் தரப்பு வாதம் 

ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும், கட்சி விதிப்படி தலைமை நிலையச் செயலாளர்தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பில் நான் இருக்கிறேன், ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பி.எஸ். மனு தாக்கல் செய்ததே தவறு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் கட்சி அலுவலகத்துக்கு உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லாத போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு மனுவில் ஓபிஎஸ் கோரியுள்ளார். அதிமுக அலுவலகம் தனி நபர் சொத்து அல்ல என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு வாதம் 

கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் சென்றேன்; அங்கே இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தடுத்தனர் கட்சி அலுவலகத்தில் நுழைய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் நீதிபதி சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பதிலளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்