#BREAKING : கொரோனா தொற்று – முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி..!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்தான் ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  பரிசோதனை முடிந்த பின், வீடு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்