கும்பகோணத்தில் கேஸ் சிலிண்டரை மனைவி தலையில் போட்டுக் கொலை செய்த கணவன்!

Default Image

மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் கும்பகோணத்தில்  காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கும்பகோணம் சாக்கோட்டை மெயின் சாலையைச் சேர்ந்தவர் பஷீர் அகமது. இவருக்கும் இவரது மனைவி பாத்திமாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை பாத்திமா தூங்கிக் கொண்டிருந்த போது, பஷீர் அகமது அவரது தலையில் கேஸ்சிலிண்டரை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் மனைவியைக் கொலை செய்ததாக பஷீர் அகமது நாச்சியார்கோவில் காவல் நிலையத்திலும் சரணடைந்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாத்திமாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்