விரைவில் திரையில் தலைமை செயலர் இறையன்பு.?! பிரபுதேவா படத்தில் சிறப்பு தோற்றம்.!
பிரபுதேவா நடித்துள்ள குழந்தைகளுக்கான பேண்டஸி திரைப்படமான மை டியர் பூதம் படத்தில் கௌரவ தோற்றத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக, இயக்குனராக, நடிகராக பல்வேறு முகங்கள் கொண்டுள்ளார் பிரபு தேவா. இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் தயாராகி வருகிறது.
அதில், அடுத்து வெளியாக உள்ள பெரிய திரைப்படம் என்றால் அது மை டியர் பூதம் திரைப்படம் தான். இதில் சூப்பர் டீலக்ஸ் திரைபடத்தில் விஜய் சேதுபதி மகனாக வரும் அஸ்வந்த் பிரபு தேவா உடன் நடித்துள்ளான்.
இந்த திரைப்படம் குழந்தைகளுக்காக , கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட பேண்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றும் கெளரவ தோற்றத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு நடித்துள்ளாராம்.
அவரை மேடை பேச்சாளராக பல மேடைகளில் பார்த்திருக்கிறோம். எழுத்தாளராக பார்த்திருக்கிறோம். முதன் முறையாக திரையில் குழந்தைகளுக்கன படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.