இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்ல.. வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – அமைச்சர் எல்.முருகன்
இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் எல்.முருகன் பேச்சு.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன் அவர்கள் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் மனித வளம் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. உலகை ஆளும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கும் என்றும், தேசிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.