#Breaking:தொழில்முனைவோருக்கு கொரோனா உதவி;ரூ.50 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் பெற 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும்,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21-55 வயது வரையுள்ள தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”கடந்த 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான அமைச்சர் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்.அதன்படி,
“கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில்முனைவோர் பயனடையும் வகையில் தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் (கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கு நிவாரணம் – கேர்) என்கின்ற புதிய திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்”,என்று அறிவித்திருந்தார்.
அதன்படி,தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் செயல்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.