#Breaking:தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவை சிவசேனா ஆதரிக்கும்: உத்தவ் தாக்கரே
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை சிவசேனா ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
சிவசேனாவின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் “திரௌபதி முர்முவை ஆதரிப்பது என்பது பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை” என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இந்த ஆதரவு நிலைபாட்டை சிவசேனா எடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுடன் சேனா “நல்ல உறவை” பகிர்ந்து கொண்டது என்றும் ஆனால் “அழுத்தத்தின் கீழ்” செயல்படாது என்றும் அவர் கூறினார்.