10 வயது சிறுவனை விழுங்கிய முதலை-கிராம மக்கள் செய்த செயல்
மத்திய பிரதேச மாநிலத்தில் குளத்தில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை விழுங்கிய ராட்சத முதலை.
இந்தியாவின் பல பகுதிகளில் பருவ மலை தொடங்கிய நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் ஆறு,ஏரி போன்ற நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தின் அருகே செல்லும் போது அதில் மக்கள் அடித்து செல்ல வாய்ப்புகள் இருப்பதாலும், நீர்மட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஆபத்தான விலங்குகள் நம்மை தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நேற்று காலை குளத்தில் குளித்து கொண்டிருந்த 10 சிறுவனை முதலை விழுங்கியது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் தடி,வலை மற்றும் கயிறு பயன்படுத்தி அந்த ராட்சத முதலையை பிடித்தனர்.குறித்து அந்த சிறுவனின் குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து அந்த முதலையை எடுத்து சென்றனர்.
இது குறித்து மீட்பு குழுவினர் கூறுகையில், “முதலை சிறுவனை இழுத்து சென்றிருந்தால் விழுங்கி இருக்க வாய்ப்புகள் இல்லை. சிறுவன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றிருக்க கூடும்” என்று தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து மீட்பு குழுவினர் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
मध्य प्रदेश के श्योपुर में एक मगरमच्छ ने 10 साल के बच्चे को निगल लिया. बच्चा नदी में नहाने गया था. pic.twitter.com/UA5vVBQDmP
— India.com (हिन्दी) (@IndiacomNews) July 12, 2022