அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது – சசிகலா அதிரடி
இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றபோது அவர் ஓபிஎஸ்-யை நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும் என சசிகலா பேச்சு.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் திருமண விழாவில் பேசிய வி.கே.சசிகலா அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது. சற்று நேரத்திற்கு முன்பு ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்கி இருந்தனர். நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது தற்போது கூட்டிய அதிமுக பொதுக்குழுவே தவறானது. இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றபோது அவர் ஓபிஎஸ்-யை நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது. நிச்சயம் தொண்டர்களின் ஆதரவுடன், நிஜத்தை பெறுவோம். தொண்டர்கள் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது; சுயநலவாதிகளை விட்டு விலகும் நிலை வந்துவிட்டது; தலைமை பதவியை பணபலத்தால் அடித்துப் பிடுங்கலாம் என்பது நிலைக்காது என தெரிவித்துள்ளார்.