#Breaking:”எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது;திமுக ஆட்சி முடிவு கட்டுவதான் லட்சியம்” – இபிஎஸ் அதிரடி!

Default Image

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,பொதுக்குழு விழா மேடையில் பேசிய இபிஎஸ் கூறுகையில்:”கட்சிக்காக உழைத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்.ஒற்றைத் தலைமை வேண்டும் என நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த வகையில்,கட்சியைக் காக்க ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தேடுத்துள்ளீர்கள்”,என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,பேசிய இபிஎஸ்:”அம்மாவிடம் நற்பெயர் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.அந்த வகையில்,அம்மா என்ன எண்ணுகிறாரோ,அந்த எண்ண ஓட்டத்திற்கு தகுந்தவாறு,நாம் நமக்கு கொடுக்கப்பட்ட  துறையிலே முத்திரை பதிக்க வேண்டும்.அம்மா என்ன கட்டளைகளையிடுகிறார்களோ அதனை செவ்வனே நிறைவேற்றி ஆட்சிக்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்.அவ்வாறு அம்மாவின் அறிவுரைகளை ஏற்று நெடுஞ்சாலைதுத்துறை,பொதுப்பணித்துறையில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம்.அதனைத் தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்”,என்று கூறினார்.

மேலும்,”அதிமுக ஜனநாயகமாக இயங்கும் கட்சி.நான் கடுமையாக உழைப்பேன்.நீங்கள் எண்ணுவதை நிறைவேற்றுவேன்.திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்,வெற்றி கொடி நாட்டுவோம்.அதுதான் நமது லட்சியம்.அதிமுகவை அசைக்கவோ,ஆட்டவோ எந்த கொம்பனாலும் முடியாது.அந்த வகையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் கட்சியை விட்டு யாரவாது வெளியேறினார்களா?,ஆனால்,இந்த கட்சியில் பதவி பெற்று எட்டப்பராக இருந்து இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள்  வெளியேறலாம்.ஆனால்,கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் உங்களது ஆதரவால்தான் 31 ஆண்டு கால ஆட்சியை தக்க வைத்துள்ளது அதிமுக”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்,அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,தன்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும்,இபிஎஸ் ,கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்