#Breaking:போலி தகவல்கள் – பாஜக நிர்வாகி சவுதா மணி கைது!

Default Image

அரசு குறித்து போலி தகவல்களை பரப்பிய பாஜக நிர்வாகி சவுதா மணி கைது.

நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தையும்,பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த வேளையில்,இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட் டர் பக்கத்தில் பதிவிட்டார்.இதனால்,அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து,இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்தார்.ஆனால்,இவரது செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி,முன் ஜாமீன் கேட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில்,அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பதிவிட்டதாக கூறி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதா மணி கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக,கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சவுதா மணி மீது வழக்குபதிவு செய்திருந்த நிலையில்,தற்போது அவரை சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் செய்துள்ளனர்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்