முக்கிய பிரபலம் மறைவு…இன்று அரசு நிகழ்ச்சிகள் ரத்து;நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!
ஜப்பானில் நாடாளுமன்ற மேலவைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஆளும்கட்சி,எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.அந்த வகையில்,நாரா நகரில் நேற்று லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை சேர்ந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது,அவரது பின்னால் இருந்த 41 வயது மதிக்கத்தக்க டெட்சுயா யமகாமி எனும் நபர் ஷின்சோ அபேவை தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டிவிட்டார்.
அதன் பிறகு,உடனடியாக ஷின்சோ அபேவுக்கு முதலுதவி செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால்,சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டார்.குறிப்பாக, ஷின்சோ அபேவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இதயத்தில் குண்டு துளையிட்டதாகவும்,அதன் காரணமாக இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டு,இதயம் மற்றும் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத்தான் ஷின்சோ அபே உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
ஒரு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்,முன்னாள் பிரதமர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது இறப்புக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழகத்தில் இன்று ஒரு நாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே சமயம்,முன்னாள் பிரதமர் ஜப்பான் ஷின்சோ அபேவின் இறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று துக்கம் அனுச்சரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியதாவது:”ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு எங்களின் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாக,9 ஜூலை 2022 அன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
As a mark of our deepest respect for former Prime Minister Abe Shinzo, a one day national mourning shall be observed on 9 July 2022.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022