ஷின்சோ அபே உயிரிழப்பு காரணங்கள் வெளியீடு.. இதயத்தில் புகுந்த குண்டு… நுரையீரல் அடைப்பு…

Default Image

ஷின்சோ அபேவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இதயத்தில் குண்டு துளையிட்டுள்ளதால், இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டு அவர் உயிர் பிரிவுக்கு முக்கிய காரணமாக மாறியதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளார். 

ஜப்பானில் விரைவில் அந்நாட்டு பிரதமருக்கான தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சார வேளைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தான் ஜப்பான் முன்னாள் பிரதமரான 67 வயதான ஷின்சோ அபே மேற்கு ஜப்பான் நகரான நாராவில் உள்ள ரயில் நிலையம் அருகே இன்று (வெள்ளி கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அந்த சமயம் தான் 41 வயதான டெட்சுயா யமகாமி எனும் நபர் ஷின்சோ அபேவை தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டிவிட்டார்.

இந்த துப்பாக்கியானது கையால் தயாரிக்கப்பட்ட இரட்டை குழல் துப்பாக்கி வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. குற்றவாளி டெட்சுயா யமகாமி 2000ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய கடற்படையில் சில ஆண்டுகள் பணியாற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களால் எதோ ஒத்துப்போகாமல், ஷின்சோ அபேவை கொல்ல வேண்டும் என்றே சுட்டதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

துப்பாக்கி சூடு ஷின்சோ அபே மீது நடந்ததும், உடனடியாக பாதுகாவலர்கள் முதலுதவி செய்து, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

japan former pm Shinzo Abe

ஷின்சோ அபேவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இதயத்தில் குண்டு துளையிட்டுள்ளதாம். அதன் காரணமாக இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டதாம். இதயம் மற்றும் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத்தான் ஷின்சோ அபே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளாராம்.

இத துப்பாக்கி சூட்டிற்கு பிறகு பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் நாடு முழுவதும் பிரச்சார நிகழ்வுகளில் இருந்து அவசரமாக தலைநகர் டோக்கியோவுக்குத் திரும்பினர். பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, இந்த துப்பாக்கி சூட்டிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். பாதுகாப்பு கடுமையா உள்ள ஜப்பானில், துப்பாக்கி கலாச்சாரம் கடும் கட்டுப்பாடு கொண்ட ஜப்பானில் இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்