திராவிட மாடல் என்பது வெறும் செய்தி அரசியல் – சீமான்
திராவிட மாடல் அரசியல் என்பது, செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது. வெறும் செய்தி அரசியல் தான் என சீமான் பேட்டி.
திருவள்ளுவர் மாவட்டத்தில் இரட்டைமலை பிறந்தநாள் விழா கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திராவிட மாடல் அரசியல் என்பது, செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது. வெறும் செய்தி அரசியல் தான். இதுதான் திராவிட மாடல். இப்பொது இல்லை. அரை நூற்றாண்டு காலமாக இதுதான் நடைபெறுகிறது.
சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் சொன்னதை செய்யமாட்டார்கள், சொல்லாதவைகளான கொள்ளை, ஊழல் போன்ற செயல்களை செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.