#Breaking:வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு!

Default Image

திருவாரூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக,முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு,அலுவலகம் உட்பட 49 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.அந்த வகையில்,அவரது நண்பர்கள், உறவினர்கள்,ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.அதில்,”உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சர்,தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான காமராஜ்,கடந்த 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும்,அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாருர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 1PC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) திரு.காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) Dr.M.K.இனியன், 3) Dr.K.இன்பன், 4) திரு.R.சந்திரசேகரன் 5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) திரு.S.உதயகுமார் ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது’,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்