வாட்ஸ் ஆப் பயனாளர்களே! உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

வாட்ஸ்அப் தனது பயனர்களின் தேவையை மேம்படுத்தவும்  அதில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அம்சங்களைச் செயல்படுத்தி வருகிறது.டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது புதிய அம்சங்களால் முன்னிலை வகித்து வருகிறது.

உடனடி-செய்தி அனுப்பும் தளத்தில் அதாவது வாட்ஸ் ஆப் பயனர் தேவையை மேம்படுத்தவும்,ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அப்டேட்களை மேற்கொண்டு வரும் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது பிடியைத் தக்கவைப்பதற்க்காக வாட்ஸ்அப் அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சமானது இலக்க-குறியீடுகளை(OTP) தானே சரிபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் வாட்ஸ் ஆப்பில் உள்நுழைவு செயல்முறை பயனர்களுக்கு மிகவும் எளிதாக அமையக்கூடும். வழக்கமாக வாட்ஸ்அப்பில் உள்ளே நுழையும் போது ஆறு இலக்க OTP ஐ பயனரின் தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் அல்லது அழைப்பு மூலம் அனுப்பும், அதனை டைப் செய்த பின்னரே பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தொடரும்.

ஆனால் தற்போது WABetaInfo நிறுவனத்தின் அறிக்கைபடி, பயனர்கள் தங்கள் தொலைபேசியில் எந்த குறியீட்டையும்(OTP) டைப் செய்யாமல் உள்நுழைவதற்கு WhatsApp ஃப்ளாஷ் அழைப்பு என்ற புதிய அம்சத்தை பயன்படுத்தும்.

மேலும் இந்த புதிய பயன்பாடானது  நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் மட்டுமே தற்பொழுது  கிடைக்கும்,இதற்கான அப்டேட் முற்றிலும் தானாகவே செய்துக்கொள்ளும் வகையில் உள்ளது.

WABetaInfo இது “மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளது, ஏனெனில் பயனர் அழைப்பைப் பெறும் தொலைபேசி எண் அவர்கள் அலைபேசிக்கு  ஒவ்வொரு முறையும் மாறுபடும்,மோசடி செய்பவர்களை வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளில் உள்நுழைய முடியாது.

வாட்ஸ்அப்பின் இந்த  புதிய அம்சம் தானாகவே உள்நுழைவுகளைச் சரிபார்க்கும், மேலும் இது ஆப்பிள் பயனர்களுக்கு இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment