10ஆம் வகுப்பில் வெறும் 44 % மார்க் தான்.. நான் இப்போ ஐ.ஏ.எஸ் அதிகாரி… வைரலாகும் மதிப்பெண் சான்று…
பீகாரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் என்பவர் தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அதில் வெறும் 44.8 சதவீத மார்க் தான் வாங்கியுள்ளார். இதனை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர். பலர் அதிக மார்க் எடுத்தால் தான் நல்ல நிலைமைக்கு வரமுடியும். 10 ஆம் வகுப்பில் குறைவான மார்க் எடுத்துவிட்டால் அவ்வளவு தான் என நினைப்பார்கள்.
ஆனால், அது அப்படி அல்ல. எந்த மதிப்பெண் எடுத்தாலும், நம்மால் முடியும் என நினைத்தால் உயரிய பதவிகளில் ஒன்றான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கூட மாறிவிடலாம் என வாழ்ந்து சாதித்து காட்டியுள்ளார் பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் சரண் அவர்கள்.
இந்த மதிப்பெண் சான்றிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதற்கு கிழே பலர் உற்சாகமாக தங்களுக்கு ஓர் உந்துசக்தியாக, உங்கள் மார்க் எங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது என பலவாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.
My 10th Marksheet. pic.twitter.com/jmYkMohzWf
— Awanish Sharan (@AwanishSharan) July 6, 2022