ஒரே வாரத்தில் 115 கோடி பார்வையாளர்கள்…. மிரட்டும் ஹாலிவுட் வெப் சீரிஸ்… இது ரசிகர்களின் பேவரைட்….
பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4 வெளியான ஒரே வாரத்தில் 100 கோடிக்கும் அதிகமான முறை பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, தென்கொரிய வெப் சீரிஸான “ஸ்க்விட் கேம்-ன் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அறிவியல் சார்ந்த திகிலூட்டும் கதை நிறைந்த இந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4 சீரீஸ் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஜூலை 1 -ஆம் தேதி வெளியானது. இந்த சீரியஸ் மிகவும் அருமையாக இருந்ததால், ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 28 நாட்களுக்குள் உலகளவில் 1.15 பில்லியன் மணிநேரம் பார்க்கப்பட்டது, ஆங்கிலத் தொடரின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, அதே அளவீட்டின் அடிப்படையில் கொரிய நாடகமான ‘ஸ்க்விட் கேம்’க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.