#Breaking:நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல் – தமிழக அரசு!
நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னதாக அறிவுறுத்திய நிலையில்,நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில்,நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம்,ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும்,நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாவிட்டால் மேல்முறையீடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.